DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
POST YOUR MEDICAL TIPS HERE.......
HTML https://medicaltips.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: இயற்கை ம&...
*****************************************************
#Post#: 12--------------------------------------------------
உண்மையில்
மலச்சிக்கல்
என்றால்
என்ன?
DIR By: A666A777
Date: January 16, 2015, 5:50 am
---------------------------------------------------------
இந்த
காலத்தில்
மலச்சிக்கல்
இல்லாத
மனிதரை
பார்ப்பது
அரிது.
மலச்சிக்கல்
அவ்வளவு
சாதாரண
கோளாறு.
உண்மையில்
மலச்சிக்கல்
என்றால்
என்ன? ஒரு
நாளுக்கு
ஒரு
தடவையாவது.
அதாவது 24
மணி
நேரத்தில்
ஒரு
தடவையாவது,
மலம்
கழிக்காவிட்டால்,
அந்தக்
கோளாறு
மலச்சிக்கல்
என்கிறது
ஆயுர்வேதம்.
முறை
தவறாமல்,
கஷ்டப்படாமல்,
மலம்
கெட்டியாகி,
கல் போல்
ஆகாமல்,
சீராக மலம்
கழிப்பது,
(ஒரு
நாளில் ஒரு
தடவையாவது)
நல்ல
அடிப்படை
ஆரோக்கியத்திற்கு
அறிகுறி.
மலச்சிக்கல்
ஏற்பட்டால்
வாரத்திற்கு
3 முறை தான்
மலம்
வெளியேறும்.
மலம்
‘கல்போல்’
கெட்டியாகி,
மலம்
கழிக்கையில்
வேதனையும்
வலியும்
தோன்றும்.
வயிறு
உப்புசத்தால்
பானை போல்
பெருகும்.
பசியின்மை,
வாந்தி,
பிரட்டல்
தலைவலி
உண்டாகும்.
உணவு உண்ட
நேரத்திலிருந்து
16 லிருந்து 24
மணி
நேரத்துக்குள்,
அது
ஜீரணமாகி,
மீந்த
கழிவு
வெளியேற
வேண்டும்.
கழிவை
பெருங்குடல்,
மலக்குடலுக்கு
‘தள்ளி’ அது
மலத்தை
வெளியேற்ற
வேண்டும்.
இந்த கழிவை
“ஆமா”
என்கிறது
ஆயுர்வேதம்.
மலச்சிக்கல்
இருப்பதை
கண்டறிய,
சிறிய அளவு
கரிப்பொடியை
உட்கொள்ள
வேண்டும்.
பிறகு
வரும்
மலத்தை
கவனிக்க
வேண்டும். 24
மணிநேரத்தில்
கருமை
நிறமாக
மலம்
வராவிட்டால்,
மலச்சிக்கல்
என்று
அர்த்தம்.
அனைத்து
நோய்களின்
காரணம்
மலச்சிக்கலே
என்று
இயற்கை
சிகிச்சை
முறை
கூறுகிறது.
காரணங்கள்
1.
ஒவ்வொருவரின
உடல் வாகை
பொறுத்தது.
(பிரகிருதி)
2. இயற்கை
‘வேகங்களை’
தடை
செய்வது.
நம்மில்
பலர் இந்த
தவறை
செய்கிறார்கள்.
தற்போதைய
அவசர
உலகில்
மலம்
கழிப்பது
ஒரு
தொல்லையாக
தோன்றுகிறது.
இயற்கை
உந்துதலை
அடக்கிவிடுவது
மட்டுமல்ல;
மலம்
கழிக்கும்
போது,
தேவையான
நேரத்தையும்
நாம்
கொடுப்பதில்லை.
3. உணவில்
போதிய அளவு
பச்சைக்காய்கறிகள்,
கீரைகள்,
பழங்கள்
இல்லாமல்
போதல்.
தவறான
உணவுகள்.
4. போதிய
அளவு
தண்ணீர்
குடிக்காமல்
இருப்பது.
“டிஹைடிரேஷன்”
எனும்
நீர்மச்சத்துகளின்
இழப்பு,
வேறு
நோய்களால்
ஏற்பட்டிருக்கலாம்.
நிறைய
தண்ணீர் /
திரவங்கள்
குடிப்பது
அவசியம்.
அதற்கென்று
காப்பி,
கோலா
பானங்கள்,
மதுபானங்களை
குடிக்க
வேண்டாம்!
இவை
மலச்சிக்கலை
அதிகரிக்கும்.
5.
மலமிளக்கிகளை
அடிக்கடி
உபயோகிப்பது.
6.
பெருங்குடல்
தசை
அசைவுகளால்
மலத்தை
வெளியே
தள்ளும்.
ஜுரம்,
ஷயரோகம்,
சோகை
இவற்றால்
இந்த
இயக்கம்
பாதிக்கபடலாம்.
இதனால்
மலம்
மலக்குடலை
அடைவது
தடைப்படும்.
7.
மருந்துகள்
–
வயிற்றுவலி,
உயர்ரத்த
அழுத்தம்,
தலைவலி,
பார்க்கின்ஸன்
வியாதி
இவற்றுக்கு
எடுத்துக்
கொள்ளும்
மருந்துகள்
மலச்சிக்கலை
உண்டாக்கும்.
8.
மனநோய்கள்,
ஸ்ட்ரெஸ்
இவைகளும்
மலச்சிக்கலை
ஏற்படுத்தும்.
இவற்றுக்காக
எடுத்துக்
கொள்ளும்
மருந்துகளும்
மலச்சிக்கலை
ஏற்படுத்ம்.
9. சில
தூண்டுதல்களை
உபயோகிப்பது.
உதாரணமாக
சிகரெட்,
டீ இவற்றை
குடிக்கும்
பழக்கத்தை
உபயோகிப்பது
மலம்
கழிக்கப்
போவது.
[size=12pt]சிகிச்சை
முறைகள்
உணவின்
மூலம்
1. கோதுமை
ரொட்டிகளை
உண்ணவும்.
அரிசி உணவை
குறைக்க
வேண்டும்.
2. நிறைய
பச்சை
காய்கறிகள்,
நார்ச்சத்து
நிறைந்த
காய்கறிகளை
சேர்த்துக்
கொள்ளவும்.
நார்ச்சத்து
மலச்சிக்கலுக்கு
இயற்கையான
நல்ல உணவு
மருந்து.
3. நிறைய
தண்ணீர்
குடிக்கவும்.
4. பொறித்த
உணவுகளை
தவிர்க்கவும்.
5. வாத
பிரகிருதிகளுக்கு
நெய்யும்,
எண்ணையும்
நன்மை
செய்யும்.
பெருங்குடலுக்கு
எண்ணை
பசையை
அளித்து,
மலம் நகர
உதவும்.
6. ஒதுக்க
வேண்டிய
உணவுகள் / –
‘பாட்டில்’
பானங்கள்,
ஜாம்,
பிரெட்,
ஐஸ்கிரீம்,
ஊறுகாய்,
அப்பளம்,
சீஸ்,
‘சமோசா’
இவைகளை
குறைக்கவும்.
7. சேர்க்க
வேண்டியவை:-
முழுகோதுமை,
பாலிஷ்
செய்யப்படாத
அரிசி
உலர்ந்த
திராட்சை,
அத்தி,
மாதுளை,
ஆப்பிள்,
வாழைப்பழம்
போன்றவை.
பீன்ஸ்,
முள்ளங்கி,
கேரட்,
காலிஃப்ளவர்,
முட்டைகோஸ்,
வெங்காயம்,
வெள்ளரிக்காய்
போன்ற
காய்கறிகள்.
8. ஜீரகம்,
மிளகு,
மஞ்சள்,
தனியா,
பெருங்காயம்
– இவற்றை
உணவில்
சேர்த்துக்
கொள்ளவும்.[/size]
Thanks -
HTML http://thainilam.mullimalar.in/
*****************************************************
Page 1 of 1